Thursday, April 29, 2010

பார்வேர்ட் மெயில் - நித்தியானந்தா


நித்யானந்தா ஆணா, பெண்ணா பரிசோதிக்க போலீசார் முடிவு
Front page news and headlines today 
பெங்களூரு : 'நடிகை ரஞ்சிதாவுடன் வீடியோவில் இருப்பது சாமியார் நித்யானந்தா தான்' என, ஐதராபாத்தில்உள்ள தடய அறிவியல் பரிசோதனை மையம் உறுதிபடுத்தியுள்ளது. 'நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று, நீதிமன்றத்தில் சாமியார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 
'நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நானல்ல. என், 'இமேஜை' பாழ்படுத்துவதற்காக கிராபிக்ஸ் செய்து வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது' என்று சாமியார் கூறியிருந்தார். இதையடுத்து, ஐதராபாத்திலுள்ள தடயஅறிவியல் பரிசோதனை மையத்திற்கு நித்யானந்தா -நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோக்களை அனுப்பி பரிசோதனை செய்தனர். தற்போது, பரிசோதனை முடிவில், சம்பந்தப்பட்ட வீடியோவில் நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்யானந்தா தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தினால், பல தகவல்கள் வெளியாகும் என்று சி.ஐ.டி., போலீசார் கருதுதுகின்றனர். நடிகை ரஞ்சிதா மட்டுமின்றி, பல்வேறு பெண்களுடன் சாமியார் இருப்பது போன்ற, 'சிடி'க்களும் போலீசாரிடம் சிக்கியுள்ளன. இதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜரான நித்யானந்தா கூறுகையில், 'நான் ஏதாவது தவறு செய்திருந்ததாக நீதிமன்றம் கருதினால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
கர்நாடக போலீஸ் பிடியில் ரஞ்சிதா? சாமியார் நித்யானந்தா வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவிடம், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் இரவு துவக்கிய விசாரணையை நேற்றும் தொடர்ந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், 'ரஞ்சிதாவை அழைக்கவில்லை' என்று, கர்நாடக சி.ஐ.டி., டி.ஜி.பி. குரு பிரசாத் மறுத்துள்ளார். நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையின் போது, ரஞ்சிதா குறித்த தகவல்களை தெரிவித்து, அவருடைய போன் நம்பரையும் கர்நாடக போலீசாரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக சி.ஐ.டி., போலீசார் ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு, இரண்டு நாட்களுக்குள் பெங்களூரு வர வேண்டும், என்று கெடு விதித்தனர். அதற்கு ரஞ்சிதா, 'போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். விரைவில் பெங்களூரு வருகிறேன்' என்று கூறியிருந்ததாக, சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா தெரிவித்திருந்தார். 
நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. அதற்குள், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணையை முடித்து விட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, நடிகை ரஞ்சிதா பெங்களூரு வந்துள்ளதாகவும், அவரிடம், போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்களை போலீஸ் தரப்பில் உறுதிபடுத்த வில்லை. நேற்று காலை, ரஞ்சிதாவிடம் விசாரணை நடந்து வருகிறது என்று கூறிய போலீசார், மாலையில் அந்த தகவலை மறுத்து விட்டனர்.
இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட நித்யானந்தாவின் போலீஸ் காவல், இன்றுடன் முடிகிறது. இன்று மாலை அவர், ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, கடந்த 23ம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில், நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில், சாமியார் நித்யானந்தா மீதான விசாரணை இன்னமும் முடியவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணை, மே 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிடதி ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பான வழக்கு விசாரணையும் இன்று ஒத்தி வைக்கப்பட்டது

5 comments:

Unknown said...

@சித்ரா
என்ன இது சின்ன புள்ளதனமா சிரிச்சிகிட்டு...... எவ்ளோ சீரியஸ் மேட்டர் போட்ருக்கோம்...என்ன சிரிப்பு ராஸ்கல்...


:-)

சைவகொத்துப்பரோட்டா said...

தினமலர் செய்திதானே!!!

Unknown said...

@parotta
yes yes....

ப.கந்தசாமி said...

நான் மொதல்லயே நெனச்சனுங்க, இந்தாளு மூஞ்சி பொம்பள மூஞ்சியா இருக்குதேன்னு.

Unknown said...

ஹலோ பாஸ் அவரை(அல்லது அவளை)பெங்களூரு பெண்கள் சிறையில் தான் இன்று அடைத்திருக்கிறார்கள். இன்று ஏழுமணி சன் நியூஸ் செய்தி..
என்னத்தச் சொல்ல