Thursday, April 29, 2010

பார்வேர்ட் மெயில் - நித்தியானந்தா


நித்யானந்தா ஆணா, பெண்ணா பரிசோதிக்க போலீசார் முடிவு
Front page news and headlines today 
பெங்களூரு : 'நடிகை ரஞ்சிதாவுடன் வீடியோவில் இருப்பது சாமியார் நித்யானந்தா தான்' என, ஐதராபாத்தில்உள்ள தடய அறிவியல் பரிசோதனை மையம் உறுதிபடுத்தியுள்ளது. 'நான் ஏதாவது தவறு செய்திருந்தால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று, நீதிமன்றத்தில் சாமியார் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். 
'நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நானல்ல. என், 'இமேஜை' பாழ்படுத்துவதற்காக கிராபிக்ஸ் செய்து வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது' என்று சாமியார் கூறியிருந்தார். இதையடுத்து, ஐதராபாத்திலுள்ள தடயஅறிவியல் பரிசோதனை மையத்திற்கு நித்யானந்தா -நடிகை ரஞ்சிதா தொடர்பான வீடியோக்களை அனுப்பி பரிசோதனை செய்தனர். தற்போது, பரிசோதனை முடிவில், சம்பந்தப்பட்ட வீடியோவில் நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது நித்யானந்தா தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தினால், பல தகவல்கள் வெளியாகும் என்று சி.ஐ.டி., போலீசார் கருதுதுகின்றனர். நடிகை ரஞ்சிதா மட்டுமின்றி, பல்வேறு பெண்களுடன் சாமியார் இருப்பது போன்ற, 'சிடி'க்களும் போலீசாரிடம் சிக்கியுள்ளன. இதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜரான நித்யானந்தா கூறுகையில், 'நான் ஏதாவது தவறு செய்திருந்ததாக நீதிமன்றம் கருதினால், என்னை தூக்கில் போடுங்கள்' என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், நித்யானந்தா ஆணா, பெண்ணா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதிக்குமாறு ராம்நகர் நீதிமன்றத்தில், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
கர்நாடக போலீஸ் பிடியில் ரஞ்சிதா? சாமியார் நித்யானந்தா வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவிடம், கர்நாடக சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் இரவு துவக்கிய விசாரணையை நேற்றும் தொடர்ந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால், 'ரஞ்சிதாவை அழைக்கவில்லை' என்று, கர்நாடக சி.ஐ.டி., டி.ஜி.பி. குரு பிரசாத் மறுத்துள்ளார். நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையின் போது, ரஞ்சிதா குறித்த தகவல்களை தெரிவித்து, அவருடைய போன் நம்பரையும் கர்நாடக போலீசாரிடம் கொடுத்துள்ளார். உடனடியாக சி.ஐ.டி., போலீசார் ரஞ்சிதாவை தொடர்பு கொண்டு, இரண்டு நாட்களுக்குள் பெங்களூரு வர வேண்டும், என்று கெடு விதித்தனர். அதற்கு ரஞ்சிதா, 'போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். விரைவில் பெங்களூரு வருகிறேன்' என்று கூறியிருந்ததாக, சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா தெரிவித்திருந்தார். 
நித்யானந்தாவின் போலீஸ் காவல் இன்று முடிகிறது. அதற்குள், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணையை முடித்து விட வேண்டும் என்று நடவடிக்கை எடுத்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, நடிகை ரஞ்சிதா பெங்களூரு வந்துள்ளதாகவும், அவரிடம், போலீசார் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்களை போலீஸ் தரப்பில் உறுதிபடுத்த வில்லை. நேற்று காலை, ரஞ்சிதாவிடம் விசாரணை நடந்து வருகிறது என்று கூறிய போலீசார், மாலையில் அந்த தகவலை மறுத்து விட்டனர்.
இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்ட நித்யானந்தாவின் போலீஸ் காவல், இன்றுடன் முடிகிறது. இன்று மாலை அவர், ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, கடந்த 23ம் தேதி ராம்நகர் நீதிமன்றத்தில், நித்யானந்தா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசு தரப்பில், சாமியார் நித்யானந்தா மீதான விசாரணை இன்னமும் முடியவில்லை. எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது, என்று வாதிடப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணை, மே 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிடதி ஆசிரமத்தில் சந்தன கட்டைகள் இருந்தது தொடர்பான வழக்கு விசாரணையும் இன்று ஒத்தி வைக்கப்பட்டது

Wednesday, April 21, 2010

பார்வேர்ட் மெயில் - நித்யானந்தா


நித்யானந்தா கைதாமே...???

இதோ சுட சுட செய்திகள்.....







நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையானபல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும்விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன்அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும்சாமியார்களில் நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..

ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள்
நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று...
இல்லை நிச்சியமாக இல்லை...

சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்.. ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும்என்பதற்காகவா? இல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை
வளரவேண்டும்என்பதற்காக..

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்.. ஏன்..??காற்றுவரவேண்டுமென்பதற்காகவா? இல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள்வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்.. ஏன்??? எனக்கு கால் வலிஎன்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீதுவைத்திருக்கும்
அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்றுநீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்,
எனதுசுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,
என்னை குற்றவாளி என்கிறீர்களே,
என் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால்
நான் வாங்கிய அடிகள்எத்தனை,
மிதிகள் எத்தனை,
உதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால்
ஆன்மீகப்புத்தகம்படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை
ஆனால் ஊருக்கு உபதேசம்செய்திருக்கிறேன்..

கேளுங்கள் என் கதையை,
என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்துகேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்,
பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்,
போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு
நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான்,
ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்,
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது...

என் பெயரோ நித்தியானந்தா, கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம், ஏதாவதுஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்,
கஞ்சா பிசினஸ்,கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன்
என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்......ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....
கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன்



ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...
எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல்
தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்,
வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்கவேண்டும்,
என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும்
இன்று என்முன் சட்டத்தை நீட்டுவோர்.

செய்தார்களா? தப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவை,
என்னை சாமிஎன்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்??
எனது குற்றாமா? என்னை நம்பி ஏமாந்தமூடர்களின் குற்றமா?

நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திறகாற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமா? கேனைத்தனமாக என் பேச்சைநம்பிக்கதவைத்திறந்த
மூடர்களின் குற்றமா?

எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?,
காலைப்பிடித்துவிடும்படி கூறியஎனது குற்றமா? இல்லை மாத்திரை தந்துவிட்டு
காலைப்பிடித்து விட்ட நடிகையின்குற்றமா??

இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில்,
என்னை போன்றநித்தியானந்தாக்கள், ஏமாற்றும்..........