Friday, May 28, 2010

பார்வேர்ட் மெயில் - குடிப்பழக்கம் உனக்கு மட்டுமல்ல அடுத்தவர்க்கும் கேடுதிடமான மனதுடன் தொடரவும்...
விட்டுகொடுக்கும் மனப்பான்மையும், நிறைய நிறைய காதலையும் சேர்த்து வைத்திருந்த அழகிய இளம்பெண் இவள்..


இவளது வாழ்கையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும். நாம் பாதிக்கபடுவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை இவள்..

இந்த இடுகையை முடிந்த அளவு நண்பர்கள் குறிப்பாக கார் ஓட்டும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்...
இவர் பெயர் : ஜாக்குலின் சபரிடோ செப்டம்பர் 19-1999 அன்றுதனது தந்தையுடன் 1998 ல் .குழந்தை பருவத்தில் பிறந்தநாள் விழாவின் போது....

. தனது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில்.அவர் பயணம் செய்த கார் எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளாகி கிடக்கிறது...
விபத்துக்கான காரணம்.. இவர் கார் மீது மோதிய காரை 17 வயது இளைஞன் குடித்துவிட்டு ஓட்டியது தான்...
நடந்தது : டிசம்பர் 1999.
விபத்து நடந்த 45தாவது நொடிகளில் ஜாக்குலின் மீட்கப்பட்டார்..ஆனாலும் அவரின் உடல் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்தது...விபத்திற்கு பிறகு அவருக்கு 40 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.....
அவர் தந்தையுடன் 2000௦ வருடத்தில்..சிகிச்சை பெறுகிறார்...


விபத்து நடந்து மூன்று மாதங்களுக்கு பிறகு..


இடது கண் இல்லாத நிலையில் இவரின் பார்வைக்கு சொட்டு மருந்து அவசியம்...இந்த இளைஞன் தான் குடித்துவிட்டு வண்டி ஓட்டியவர்...இவரால் இன்னும் அந்த பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை..தன்னால் ஒரு பெண் பாதிக்க பட்டதை நினைத்து அழுகிறார்...


விபத்து நடந்து மூன்று வருடங்களுக்கு பிறகு....
இன்றைய ஜாக்குலின் சபரிடோ .


எல்லாரும் கார் இடித்தவுடன் இறப்பதில்லை. இந்த புகைப்படம் விபத்து நடந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எடுத்தது..இன்னும் இவர் சிகிச்சை பெற்று கொண்டிருக்கிறார்... இவரின் உடல் 60௦% எரிந்து உள்ளது... .


Let's make as many people as we can aware of the consequences of drinking & driving.

குடிப்பழக்கம் உடலுக்கு கேடு ; நமது உடலுக்கு மட்டும் அல்ல ;அடுத்தவர் உடலுக்கும் தான்... 

Thursday, May 20, 2010

பார்வேர்ட் மெயில் - நாங்களும் ஆவோம்ல..!!!!

இதனால் சகலமான(ண)வர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....நான் கல்வி அமைச்சரானால் தமிழகத்தில் சிறந்த கல்வியை அளிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்..

யாருல அது இம்புட்டு சத்தமா துப்புறது.... எதா இருந்தாலும் கீழ இருக்கறத படிச்சுட்டு..ஓகே..
நான் கல்வியமைச்சரானால்.....!!
+2
கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும்! (வெளங்கிரும்!)

1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது?

(அ) தமிழ் (ஆ) துளு (இ) பாரசீகம்

2. கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்

2(அ).முதுமக்கள் தாழி எனப்படுவது யாது?

2(ஆ).அண்மையில் தனுஷ்-ஸ்ரேயா நடிப்பில் வெளியான,மூன்றெழுத்துத் திரைப்படம் எது?

(i) மெட்டி
(ii) சட்டி
(iii) பெட்டி
(iv) குட்டி

3.கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது?

(அ) புல் வெட்டுவது
(ஆ) பஞ்சர் ஒட்டுவது
(இ) ஊதுபத்தி விற்பது
(ஈ) கவிதை எழுதுவது

4. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது?

(அ) இன்பத்துப்பால்
(ஆ) மசாலா பால்
(இ) ஆவின் பால்

5. முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால்! (தோராயமாகச் சொல்லவும்)

6. கடியாரத்தில் பெரிய முள் 12-லும் சிறிய முள் 5-லும் இருந்தால் எத்தனை மணி? (4-க்கும் 6-க்கும் இடைப்பட்ட எண்)

7. ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை?

8. தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம்?

(அ) வட இந்தியர்கள்
(ஆ) பஜ்ஜி இந்தியர்கள்
(இ) போண்டா இந்தியர்கள்

9. எது பல்குத்த உதவும்?
(அ) துரும்பு (ஆ) கரும்பு (இ) இரும்பு

10. மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
(அ) மன்னார்குடி (ஆ) மாமண்டூர் (இ) மதுரை

11. ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?

12. உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன?

13. இந்தியாவின் தேசியப்பறவை எது?

(அ) மயில் (ஆ) காக்காய் (இ) இரண்டும் இல்லை

14. புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமா?முடியாதா?

(அ) முடியும் (ஆ) முடியாது

15. பதினான்கு தளங்கள் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது?

16. ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும்?

(அ) கரடி (ஆ) காண்டாமிருகம் (இ) ஆடு

17. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது?

(அ) துவரங்குறிச்சி
(ஆ) ஆழ்வார்குறிச்சி
(இ) கல்லிடைக்குறிச்சி

18. உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால், மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?

19. BBC (Briish Broadcasting Corporation) என்பதன் விரிவாக்கம் என்ன?

20. உங்களது முழுப்பெயரை எழுதுக (எழுத்துப்பிழை தவிர்க்கவும்)

Error! Filename not specified.
2011 கொஸ்டின் பேப்பர் ரிலீஸ் ஆய்டுச்சுடோய்.....எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...நோ பேட்வேர்ட் ஓகே....கும்மி ஸ்டார்ட்ஸ்...
Monday, May 10, 2010

பார்வேர்ட் மெயில் - அலைபேசி ஆபத்து


நான் பல முறை இவ்வாறு செய்திருக்கிறேன்... இனி இவ்வாறு செய்ய மாட்டேன்...நீங்களும் செய்ய மாட்டிர்கள் என்ற நம்பிக்கையுடன்....

cid:1.3446158225@web30608.mail.mud.yahoo.com

ஒரு சில நாட்களுக்கு முன்னர், ஒருவர் தன் அலைபேசியை வீட்டில் மின்சார இணைப்பில் வைத்திருந்தார்...(ரீசார்ஜ் இதன் தமிழாக்கம் என்ன ????)

அந்த நேரத்தில் அவரின் அலைபேசியில் அவருக்கு அழைப்பு வர,அவர் மின்சார இணைப்பில் இருந்த நிலையிலேயே அலைபேசியில் பேசியுள்ளார்....
cid:2.3446158225@web30608.mail.mud.yahoo.com

அந்த வினாடிகளில் அவரின் காதில் அலைபேசி வழியே மின்சாரம் பாய்ந்துள்ளது, உடனே வேகமாக அவர் அலைபேசியை தூர எறிந்துள்ளார்... அவர் தூக்கி போடும் போதே அது மின்சார இணைப்பின் காரணமாக வெடித்துள்ளது....

வெடி சத்தத்தை கேட்டு அவரின் பெற்றோர் அவரின் அறைக்கு வந்த போது அவர்கள் பார்த்தது...மயக்கமுற்ற நிலையில் மகனையும்,வெடித்து சிதறிய அலைபேசியையும்....cid:3.3446158225@web30608.mail.mud.yahoo.com
மகனனின் விரல்கள் வெந்து போயும்..அவரின் இருதய துடிப்பு மோசமாக இருந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்து சென்றனர்...


ஆனால், மருத்துவமைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது....


இந்த அறிவியல் கால உலகுக்கு அலைபேசி அவசியம் தான்....
cid:4.3446158225@web30608.mail.mud.yahoo.com
இதைபார்த்த பிறகாவது அலைபேசி மூலம் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்போம்...விழிப்புடன் இருப்போம்...

மின்சார இணைப்பின் போது அலைபேசியை பயன்படுத்தாதீர்கள்....
இணைப்பின் போது அழைப்பு வந்தால் மின்சார இணைப்பை துண்டித்த பின் அழைப்பை ஏற்கவும்....

தயவு செய்து இதை முடிந்தமட்டும் உங்கள் நண்பர்களுக்கு forward செய்யவும்..


Whether or not they have a cell phone. They can also inform others who do......


நன்றி

Surgical Services
cid:5.3446158225@web30608.mail.mud.yahoo.com
1400 NW 12th Ave.,
Miami, FL 33136