நான் பல முறை இவ்வாறு செய்திருக்கிறேன்... இனி இவ்வாறு செய்ய மாட்டேன்...நீங்களும் செய்ய மாட்டிர்கள் என்ற நம்பிக்கையுடன்....

ஒரு சில நாட்களுக்கு முன்னர், ஒருவர் தன் அலைபேசியை வீட்டில் மின்சார இணைப்பில் வைத்திருந்தார்...(ரீசார்ஜ் இதன் தமிழாக்கம் என்ன ????)
அந்த நேரத்தில் அவரின் அலைபேசியில் அவருக்கு அழைப்பு வர,அவர் மின்சார இணைப்பில் இருந்த நிலையிலேயே அலைபேசியில் பேசியுள்ளார்....

அந்த வினாடிகளில் அவரின் காதில் அலைபேசி வழியே மின்சாரம் பாய்ந்துள்ளது, உடனே வேகமாக அவர் அலைபேசியை தூர எறிந்துள்ளார்... அவர் தூக்கி போடும் போதே அது மின்சார இணைப்பின் காரணமாக வெடித்துள்ளது....
வெடி சத்தத்தை கேட்டு அவரின் பெற்றோர் அவரின் அறைக்கு வந்த போது அவர்கள் பார்த்தது...மயக்கமுற்ற நிலையில் மகனையும்,வெடித்து சிதறிய அலைபேசியையும்....

மகனனின் விரல்கள் வெந்து போயும்..அவரின் இருதய துடிப்பு மோசமாக இருந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக எடுத்து சென்றனர்...
ஆனால், மருத்துவமைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது....
இந்த அறிவியல் கால உலகுக்கு அலைபேசி அவசியம் தான்....

இதைபார்த்த பிறகாவது அலைபேசி மூலம் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்போம்...விழிப்புடன் இருப்போம்...
மின்சார இணைப்பின் போது அலைபேசியை பயன்படுத்தாதீர்கள்....
இணைப்பின் போது அழைப்பு வந்தால் மின்சார இணைப்பை துண்டித்த பின் அழைப்பை ஏற்கவும்....
தயவு செய்து இதை முடிந்தமட்டும் உங்கள் நண்பர்களுக்கு forward செய்யவும்..