Thursday, May 20, 2010

பார்வேர்ட் மெயில் - நாங்களும் ஆவோம்ல..!!!!

இதனால் சகலமான(ண)வர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....நான் கல்வி அமைச்சரானால் தமிழகத்தில் சிறந்த கல்வியை அளிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்..

யாருல அது இம்புட்டு சத்தமா துப்புறது.... எதா இருந்தாலும் கீழ இருக்கறத படிச்சுட்டு..ஓகே..




நான் கல்வியமைச்சரானால்.....!!




+2
கேள்வித்தாள்கள் இப்படித்தானிருக்கும்! (வெளங்கிரும்!)

1. தமிழ்நாட்டின் ஆட்சிமொழி எது?

(அ) தமிழ் (ஆ) துளு (இ) பாரசீகம்

2. கீழே தரப்பட்டுள்ள இரண்டு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு பதில் அளிக்கவும்

2(அ).முதுமக்கள் தாழி எனப்படுவது யாது?

2(ஆ).அண்மையில் தனுஷ்-ஸ்ரேயா நடிப்பில் வெளியான,மூன்றெழுத்துத் திரைப்படம் எது?

(i) மெட்டி
(ii) சட்டி
(iii) பெட்டி
(iv) குட்டி

3.கவிப்பேரரசு வைரமுத்துவின் பணி எது?

(அ) புல் வெட்டுவது
(ஆ) பஞ்சர் ஒட்டுவது
(இ) ஊதுபத்தி விற்பது
(ஈ) கவிதை எழுதுவது

4. திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால் தவிர மூன்றாவது பால் எது?

(அ) இன்பத்துப்பால்
(ஆ) மசாலா பால்
(இ) ஆவின் பால்

5. முக்காலிக்கு மொத்தம் எத்தனை கால்! (தோராயமாகச் சொல்லவும்)

6. கடியாரத்தில் பெரிய முள் 12-லும் சிறிய முள் 5-லும் இருந்தால் எத்தனை மணி? (4-க்கும் 6-க்கும் இடைப்பட்ட எண்)

7. ஆறுபடை வீடுகள் மொத்தம் எத்தனை?

8. தென்னகத்தின் வடபகுதியில் வசிப்பவர்களை எவ்வாறு அழைக்கிறோம்?

(அ) வட இந்தியர்கள்
(ஆ) பஜ்ஜி இந்தியர்கள்
(இ) போண்டா இந்தியர்கள்

9. எது பல்குத்த உதவும்?
(அ) துரும்பு (ஆ) கரும்பு (இ) இரும்பு

10. மதுரை மீனாட்சியம்மன் கோவில் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?
(அ) மன்னார்குடி (ஆ) மாமண்டூர் (இ) மதுரை

11. ஆர்க்கிமிடீஸ் கொள்கையைக் கண்டுபிடித்தவர் யார்?

12. உங்கள் சட்டையில் எத்தனை பொத்தான்கள் உள்ளன?

13. இந்தியாவின் தேசியப்பறவை எது?

(அ) மயில் (ஆ) காக்காய் (இ) இரண்டும் இல்லை

14. புவியீர்ப்பு சக்தி குறித்து எழுத முடியுமா?முடியாதா?

(அ) முடியும் (ஆ) முடியாது

15. பதினான்கு தளங்கள் கொண்ட எல்.ஐ.சி.கட்டிடத்தின் முதல் தளம் எந்தக் கட்டிடத்தில் இருக்கிறது?

16. ஆட்டுக்கால் சூப் என்றால் எந்த மிருகம் நினைவுக்கு வரும்?

(அ) கரடி (ஆ) காண்டாமிருகம் (இ) ஆடு

17. கல்லிடைக்குறிச்சி அப்பளம் தமிழகத்தின் எந்த ஊரில் தயாரிக்கப்படுகின்றது?

(அ) துவரங்குறிச்சி
(ஆ) ஆழ்வார்குறிச்சி
(இ) கல்லிடைக்குறிச்சி

18. உங்களுக்கு ஒருவர் மூன்று வாழைப்பழங்கள் கொடுத்தால், மொத்தம் உங்களிடம் எத்தனை வாழைப்பழங்கள் இருக்கும்?

19. BBC (Briish Broadcasting Corporation) என்பதன் விரிவாக்கம் என்ன?

20. உங்களது முழுப்பெயரை எழுதுக (எழுத்துப்பிழை தவிர்க்கவும்)

Error! Filename not specified.




2011 கொஸ்டின் பேப்பர் ரிலீஸ் ஆய்டுச்சுடோய்.....



எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்...நோ பேட்வேர்ட் ஓகே....கும்மி ஸ்டார்ட்ஸ்...




14 comments:

நிகழ்காலத்தில்... said...

இவ்வளவு கடினமாக இருப்பதால் பரீட்சையிலிருந்து விலகிக்கொள்கிறேன் :))

vasu balaji said...

எல்லாக் கேள்விகளும் அவுட் ஆஃப் சிலபசில் இருப்பதால் பணம் கட்டிய அனைவருக்கும் இலவச +2 சான்றிதழ் தரப்படும்:))

Chitra said...

இதை பிரிண்ட் எடுத்து கொண்டு வாரேன்.... :-)

Unknown said...

@நிகழ்காலத்தில்
பரிட்சையில் இருந்து விலகுவதை தைரியமாக கூறியதால் உங்களை பாஸ் செய்கிறேன்...

Unknown said...

@வானம்பாடிகள்

வாங்க பாலாண்ணே...நீங்க சொல்லிட்டா மறு பேச்சு இல்ல..

Unknown said...

@சித்ரா

பிரிண்ட் எடுத்துட்டா..??!!! எதுக்கு...???

ஜில்தண்ணி said...

ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்
ஹீ ஹீ ஹீ

பனித்துளி சங்கர் said...

நமக்கு கேள்வி மட்டும்தான் கேக்கத் தெரியும் அதையும் நீங்களே கேட்டா எப்படி !

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

இதுக்காகவே நீங்க சீக்கிரம் கல்வி அமைச்சராகனும்னு நான் வாழ்த்துறேன்..

ஜெய்லானி said...

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

சௌந்தர் said...

கேள்வி ரெம்ப கடினமான கேள்வி பசங்க எப்படி பாஸ் பண்ணுவாங்க பரீட்சை தேவை இல்லை

வால்பையன் said...

பதில்கள்!


1.துளு

2.கழுத்தில் கட்டுவது(தாழி)

3.பஞ்சர் ஒட்டுவது

4.ஆவின்பால்

5.6

6.4.45(நாலேமுக்கா)

7.9

8.பஜ்ஜி இந்தியர்கள்

9.இரும்பு

10.மன்னார்குடி

11.சாக்ரடீஸ்

12.பனியன் போட்டிருக்கேன்

13.காக்கா

14.முடியாது

15.தலைமை செயலகத்தில்

16.காண்டாமிருகம்

17.துவரங்குறிச்சி

18.2

19.புறம்போக்கு பன்னாடை கேபிள்

20.வாஆஆல்பையின்

நான் பாஸ் ஆயிடுவேனா!?

Unknown said...

@வால் பையன்
வாஆஆல்பையின் வாலுடன் பாசாகிவிட்டார்.... :-) கலக்கிடிங்க பாஸ்..